தொடங்கியது 'கழுகு' கிருஷ்ணா நடிக்கும் 'திரு. குரல்'

Published : Aug 16, 2018, 12:20 PM ISTUpdated : Sep 09, 2018, 07:50 PM IST
தொடங்கியது 'கழுகு' கிருஷ்ணா நடிக்கும்  'திரு. குரல்'

சுருக்கம்

இப்படத்தினை 'புரியாத புதிர்' திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு என்பவர் இயக்கவிருக்கிறார். 

விரைவில் வெளிவரவிருக்கும் 'தீதும் நன்றும்' திரைப்படத்தினை தயாரித்த H.சார்லஸ் இம்மானுவேல் N. H.ஹரி சில்வர் ஸ்கிரின்  சார்பில்  தயாரிக்கும் இரண்டாவது படம் 'திரு.குரல்'. இப்படத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தினை 'புரியாத புதிர்' திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு என்பவர் இயக்கவிருக்கிறார். ஆகஸ்ட் 20 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெறி, நிமிர் படங்களை தொடர்ந்து இயக்குனர் மகேந்திரன் நடிக்கும் படம் திரு. குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய,  வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - தியாகராஜன், ஸ்டண்ட் - ஹரி, நடனம் - ஸ்ரீ க்ரிஷ். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி