
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த லிரிக் மெக்கென்ரி.
இவருடைய தந்தை ஹாலிவுட் பட இயக்குனர். மேலும் தன் தந்தையுடன் இணைந்து லிரிக் மெக்கென்ரி சில படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தன்னுடைய 26 ஆவது பிறந்த நாளை நியூயார்க்கில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார். இந்த கொண்டாட்டம் விடிய விடிய நடந்துள்ளது. பின்பு தான் அனைவரும் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நியூயார்க் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, ரோட்டில் இறந்து கிடந்தவர் லிரிக் மெக்கென்ரி என்று தெரியவந்தது.
இவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேத பரிசோதனையில் லிரிக் மெக்கென்ரி அளவுக்கு அதிகமாக மது குடித்தால் போதையில் மூச்சி திணறி, துடிதுடித்து இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர் கோக்கைன் என்ற போதை மருந்தையும் எடுதுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். லிரிக் மெக்கென்ரி பிறந்த நாள் அன்று துடிதுடித்து இறந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.