
நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்த வெளியான திரைப்பம் '96 '. இந்த படத்தில் 1996 ஆம் வருடம் 10 வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றாக சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வையும், 10 வகுப்பு காதலையும் மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி இருந்தார், நந்தா கோபால்.
இந்த கதையில் வரும் ராம் - ஜானு என்கிற கதாப்பாத்திரத்திற்கு அருமையாக பொருந்தினர் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் தற்போது வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த படத்தில் நடிகை த்ரிஷா மிகவும் சிம்பலாக, மஞ்சள் நிற குர்தி, ஒரு ஜீன், மற்றும் ஒரு ஸ்டால் அணிந்து வருவார். இந்த உடை பல பெண்களின் இதயத்தை படம் பார்க்கும் போதே தொட்டு விட்டது. இதன் விளைவு தற்போது இந்த உடை சென்னையில் உள்ள ஜவுளி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் பலர் இந்த உடையை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.