’சுசிகணேசன் குறித்த அதிபயங்கர ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன’... பத்திரிகையாளர்களை சந்திக்கும் லீனா மணிமேகலை!

Published : Oct 16, 2018, 12:13 PM IST
’சுசிகணேசன் குறித்த அதிபயங்கர ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன’... பத்திரிகையாளர்களை சந்திக்கும் லீனா மணிமேகலை!

சுருக்கம்

பாடகி சின்மயி பஞ்சாயத்திலிருந்து வைரமுத்துவைக் காப்பாற்றும் உள்நோக்கமோ என்னவோ இயக்குநர் சுசி.கணேசனை மீண்டும் மீண்டும் வம்பிழுக்கிறார் குறுங்கத்தி இயக்குநர் லீனா மணிமேகலை.

பாடகி சின்மயி பஞ்சாயத்திலிருந்து வைரமுத்துவைக் காப்பாற்றும் உள்நோக்கமோ என்னவோ இயக்குநர் சுசி.கணேசனை மீண்டும் மீண்டும் வம்பிழுக்கிறார் குறுங்கத்தி இயக்குநர் லீனா மணிமேகலை. 

இன்று தனது கடுமையான மறுப்பை வெளியிட்டு லீனா மீது வழக்குத் தொடுக்கப்போகிறேன்’ என்று அறிவித்த சுசி கணேசனை சந்திக்கு இழுக்க ஆதாரங்களுடன் மாலை 4 மணிக்கு சென்னை பிரஸ்கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் லீனா. 

'’சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. என் சொந்த வாழ்க்கை என் மனதிற்குகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும். சினிமாவில், அவர் எடுத்த படங்களை விட மிக நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 

சுசிகணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர்,இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிய பதிவு போட்ட பிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக் குறித்த இன்னும் அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப் படுத்தும் தைரியம் வாய்க்கட்டும். இன்று மாலை 4மணிக்கு, பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!