சர்கார் கதை பஞ்சாயத்து! இயக்குனர் பாக்யராஜூக்கு மிரட்டல்!

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 6:23 PM IST
Highlights

சர்கார் படத்தின் கதைத் திருட்டு பிரச்சனையால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசைக் காட்டிலும் தனக்கு தான் பிரச்சனை அதிகம் என்று கூறியுள்ளார் கே.பாக்யராஜ். 

சர்கார் படத்தின் கதைத் திருட்டு பிரச்சனையால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசைக் காட்டிலும் தனக்கு தான் பிரச்சனை அதிகம் என்று கூறியுள்ளார் கே.பாக்யராஜ். 

செங்கோலும், சர்காரும் ஒன்னு தான் என்பது தான் தற்போது விஜயின் சர்கார் படத்தை ஆட்டிப் படைக்கும் பிரச்சனை. 2007ஆம் ஆண்டில் எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் பதிவு செய்த கதை செங்கோல். தற்போது இதே கதையைத் திருடி தான் ஏ.ஆர். முருகதாஸ் சர்காரை எடுத்துள்ளதாக வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தப் பிரச்சனையி சுமூக முடிவு காண கே.பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் மூக்கை நுழைக்க பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. 

சர்கார் கதையை பச்சை என்ற தலைப்பில் சென்ற வருடம் பதிவு செய்துள்ளதாக ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். இதை அடுத்து செங்கோலையும், பச்சையையும் முழுவதுமாக படித்த எழுத்தாளர் சங்கம் ரெண்டும் ஒன்னு தான் என்று கூறி விட்டது. இதனால் ஏ.ஆர். முருகதாசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. கே.பாக்யராஜ் சமரசம் பேசியும், படத்திற்கான கதாசிரியர் கிரெடிட்டில் வருணை சேர்த்துக் கொள்ள முருகதாஸ் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பேசியுள்ள கே.பாக்யராஜோ, சர்கார் பிரச்சனையால் தனக்கு தான் அதிக நெருக்கடி என்று மனம் வெதும்பியுள்ளார். ஏ.ஆர்.முருகதாசுக்கு வருண் மட்டும் தான் பிரச்சனை. ஆனால் தமக்கு பல விஷயங்கள் பிரச்சனையாக உள்ளதாகக் கூறியுள்ளார் பாக்யராஜ். கே.பாக்யராஜூம், விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரும் நல்ல நண்பர்கள். தற்போது செங்கோலும் சர்காரும் ஒன்னு தான் என்று தாமே கூறி இருப்பதால் சந்திரசேகர் உடனான நட்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளார் பாக்யராஜ்

இவை அனைத்திற்கும் மேலாக தனது மகன் சாந்தனு மிகப்பெரிய விஜய் ரசிகன். இந்தப் பிரச்சனையால் தன் மீதான சாந்தனுவின் பாசம் என்னவாகுமோ என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார் பாக்யராஜ். எது எப்படியோ இந்தப் பிரச்சனையால் தனக்கு தான் நெருக்கடி அதிகம் என்று தனது பாணியில் மனம் திறந்து பேசியுள்ளார் கே.பாக்யராஜ்.  மேலும் இரண்டு படத்தின் கதைகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற போது கதை திருடப்பட்டது இல்லை என்று கூறுமாறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகவும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி கொடுத்தது யார்? என்ன சொன்னார்கள் என்கிற விவரத்தை வெளியிட பாக்யராஜ் மறுத்துவிட்டார். இதன் மூலம் பாக்யராஜை சர்கார் கதை விவகாரத்தில் சிலர் மிரட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
 

click me!