
கேரளாவில் வசூலில் ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தின் சாதனையை, ‘வில்லன்’ படம் முறியடித்து கர்ஜிக்கிறது.
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை முதல்நாள் வசூலில் முதல் இடத்தை நீண்ட நாள்களாக தக்க வைத்திருந்தவர் நடிகர் மோகன்லால்.
ஆனால், இந்த வருடம் மலையாளத்தில் வெளியான மம்முட்டியின் ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தின் முதல் நாள் வசூல் 4.31 கோடி என்கிற எல்லையைத் தொட்டு முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இது மோகன்லாலின் ‘புலி முருகன்’ பட சாதனையை விட அதிகம்.
இதனால் மோகன்லால் ரசிகர்கள் பலருக்கு வருத்தம் இருந்தது. கடந்த செப்டம்பரில் வெளியான மோகன்லாலின் ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்; படம் அந்த சாதனையை முறியடிக்க தவறியது ரசிகர்களை இன்னமும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘வில்லன்’ படம் 4.91 கோடி ரூபாயை வசூல் செய்து மம்முட்டியின் தி கிரேட் ஃபாதர் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
இதனால் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மீண்டும் கர்ஜிக்க ஆரம்பித்துள்ளார். இந்த வசூல் சாதனையால் மோகன்லால் மற்றும் அவரது ரசிகர்களும் இரட்டை மடங்கு சந்தோசத்தை அனுபவிக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.