
“டாய்லெட்” படத்தின் டிரைலர் வெளியானது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பூமி பட்நேகர் உள்ளிட்டோர் நடிப்பில், ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’.
பெண்களின் மாதவிடாய் காலப் பிரச்சனை, போதிய கழிவறை இல்லாத குறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தனது கனவுக் கன்னியை கண்டறிந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கதாநாயகன் இருக்கிறார். அவருக்கு சரியான மணமகள் கிடைத்ததும், அவரை மணமுடிக்கிறார்.
ஆனால், மணமகன் வீட்டில் டாய்லெட் இல்லாததால், அவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது. இதையடுத்து தனது இல்லத்திற்காக ஒரு டாய்லெட் கட்ட அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையின்போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் கதை,
இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.