
கொரோனா ஊரடங்கு உத்தரவின் தாக்கம் பழம்பெரும் நடிகை மறைந்த மனோரமாவின் ஒரே மகன் பூபதியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியதால் அவர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்து உயிரிழந்தனர். அதே போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மது கிடைக்காத ஆத்திரத்தில் செங்கல்பட்டை சேர்ந்த சிவசங்கர்,பிரதீப்,சிவராமன் ஆகிய மூன்று பேரும் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் நடிகை மனோரமாவின் மகன் பூபதி, அதிக அளவில் தூக்கமாத்திரை சாப்பிட்டு அப்போலா மருத்தவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மது போதைக்கு அடிமையாகி இருந்த அவர், மது கிடைக்காத ஆத்திரத்தில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.