இரண்டு வார அவகாசத்துடன்... ராதா ரவி தலைமை வகிக்கும் டப்பிங் யூனியன் சீலை உடைத்த மாநகராட்சி அதிகாரிகள்!

By manimegalai a  |  First Published Mar 29, 2023, 4:23 PM IST

நடிகர் ராதா ரவி தலைவராக இருக்கும் வி ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனுக்கு கடந்த மார்ச் 11 ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சீலை சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் அவகாசத்துடன் உடைத்துள்ளனர்.
 


பழம்பெரும் நடிகர் ராதா ரவி தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் கட்டிடம், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகும்,  ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், மார்ச் 11 ஆம் தேதி சாலிகிராமம் 80-அடி சாலையில் உள்ள டப்பிங் யூனியன் வளாகத்தை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இன்று 29-03-2023 புதன்கிழமை, காலை சுமார் 11 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து, நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 17-04-2023 வரை அவகாசம் அளித்து, காவல்துறையினர் முன்னிலையில் சீலை உடைத்து, கட்டிடத்தை திறந்தனர். 

Tap to resize

Latest Videos

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு நடந்த 5 மாத சீர்..! வைரலாகும் வீடியோ..!

மேலும் சட்டரீதியான செயல்பாடுகள் பூர்த்தியானதும், டப்பிங் யூனியன் வசம் இக்கட்டிடம் மீண்டும் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும். தற்போது இந்த யூனியனுக்கு தலைவராக டத்தோ ராதாரவி உள்ளார். டப்பிங் யூனியன் நிர்வாகிகளான உபதலைவர் கே.மாலா, செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செபாஸ்டியன், .ப்ரதீப்குமார், .சரவணன், சதீஷ் நாகராஜ் ஆகியோருடன் பொருளாளர் ஷாஜிதா மற்றும் பொதுச் செயலாளர் டி.என்.பி.கதிரவன் மற்றும் மேலாளர் அம்மு ஆகியோர் உள்ளனர்.

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் நடந்த 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி! வைரலாகும் புகைப்படம்!

டப்பிங் யூனியன் செயல்பாடுகள் குறித்து... நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த காலங்களில் டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் சிலர் செய்த தவறுகளுக்காக அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் நீக்கப்பட்டனர். அதில் பி.ஆர்.கண்ணன் என்பவருக்கு மட்டும் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை உள்ளதால் அவர் இன்னும் உறுப்பினராக உள்ளார். அவர் நீக்கப்பட்டவர்களோடு இணைந்து கொண்டு இன்னும் சிலரை தூண்டி 2014 முதல் டப்பிங் யூனியனுக்கு எதிராகவும் , அதன் தலைவர் "டத்தோ" ராதாரவி அவர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக பல அவதூறுகளை பரப்பி 2018ல் நடந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி, தேர்தலில் தோற்றார்கள். 

அடுத்து 2020ம் ஆண்டு தேர்தலில் அதை விட மோசமாக தோற்றார்கள். 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் 23 பதவிகளுக்கு போட்டியிட 23 வேட்பாளர்கள் கூட இல்லாமல் வெறும் 11 பேர் மட்டுமே போட்டியிட்டு ஒருவர் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதுதான் அவர்களது தரம் மற்றும் நிலைமை. உண்மை என்றுமே மாறாது. ஆனால் பொய் மாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அவர்களோடு இருந்த பலரே அவர்களை விட்டு விலகி விட்டார்கள். 

இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்கணும்.. சீரிய பிரபல இயக்குனர்!

நேர்மையாக இருக்க முடியாதவர்கள் குறுக்கு வழியை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தலைவரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எத்தனையோ நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் டப்பிங் பேசி அதில் இருந்து கொடுத்த 5 சதவீதத்தை சிறுக சிறுக சேமித்து அந்த பணத்தில் கட்டிய இந்த கட்டிடத்தை பாதித்துள்ளனர். சிறியதொரு குறையை வைத்து எங்கள் கட்டிடத்தை இடிக்க அவர்களின் தீய முயற்சி இது.

டப்பிங் யூனியன் இருந்த கட்டிடத்திற்கு தடை ஏற்படுத்தலாம், ஆனால் டப்பிங் யூனியனை அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எங்கள் தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் சிறப்பான தலைமையில் இதே இடத்தில் , "டத்தோ ராதாரவி வளாகம்" மீண்டும் சீரியதொரு எழுச்சி பெறும். டப்பிங் யூனியன், தனது உறுப்பினர்களுக்காக தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்படும்," என்று தெரிவித்துள்ளனர்.

click me!