‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரிலீஸாக இவர்கள்தான் காரணம்...முழிக்கும் முருகதாஸ்...

By Muthurama LingamFirst Published Apr 30, 2019, 11:59 AM IST
Highlights

‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரீலீஸ் ஆவதற்கான காரணத்தை இயக்குநர் முருகதாஸ் கண்டுபிடித்துவிட்ட நிலையிலும் நடவடிக்கை எதுவும் எடுக்கமுடியாமல் முழித்துக்கொண்டிருக்கிறாராம்.
 

‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரீலீஸ் ஆவதற்கான காரணத்தை இயக்குநர் முருகதாஸ் கண்டுபிடித்துவிட்ட நிலையிலும் நடவடிக்கை எதுவும் எடுக்கமுடியாமல் முழித்துக்கொண்டிருக்கிறாராம்.

கடந்த 10 தேதி மும்பையில் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு 20 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படப்பிடிப்பில் ஐ.டி.கார்டு இல்லாதவர்கள் நுழைய முடியாது. படப்பிடிப்புக் குழுவினர் செல்போனில் ஸ்டில் எடுக்கக் கூடாது என்ற கெடுபிடிகளை மீறி இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட ஸ்டில்கள் ரிலீஸாகியுள்ளன.

துவக்கத்தில் இதை எடுத்து வெளியிடுவது யார் என்று தெரியாமல் முழித்து வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டார். கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இம்மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என்பதே அக்கண்டுபிடிப்பு.

மும்பையிலுள்ள ஒரு மிகப்பெரிய கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. மிக விலை உயர்ந்த கேமரா போன்கள் வைத்திருக்கும்  அந்தக் கல்லூரி மாணவர்கள்தாம் ஆர்வமிகுதியில் இப்படி படங்களை எடுத்து வலைதளங்களில் பரப்பும் வேலையை செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்திடம் பேசி தற்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி நடக்கிறதாம். அது முடியவில்லை என்றால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றும் எண்ணமும் இருக்கிறதாம்.

click me!