
பேய் படங்கள் என்றாலே தனி ரகம் தான். பயத்தை தேடி சென்று ரசிப்பது மனித இயல்பு. இது போன்ற விநோத ரசனை கொண்டவர்களுக்காகவே, பல திகில் திரைப்படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. திகில் படங்களில் ஹாலிவுட் படங்கள் எப்போதுமே வேற லெவல் தான். அந்த வகையில் ”காஞ்சூரிங்” திரைப்படத்தை யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
சாதாரணமான பேய் கதைகளை விட, நிஜ பேய்க்கதைகள் தான் அதிகம் திரில் கொடுக்கும். காஞ்சூரிங் அப்படிப்பட்டது தான். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து வந்த தம்பதியர், தங்கள் ஆராய்ச்சியில் பதிவு செய்திருந்த ஆவணங்களை, அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான் காஞ்சூரிங்.
இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்தவர் ’ஜேம்ஸ் வான்’. ’காஞ்சூரிங்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு கன்னியா ஸ்த்ரீ போன்ற அமானுஷ்யமான கதாபாத்திரம் தான், கதையில் மிரட்டலாக இருக்கும். அந்த கன்னியா ஸ்த்ரீ பற்றிய கதையை தான் இப்போது ”தி நன்” (THE NUN) என்ற பெயரில் படமாக்கி இருக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் இன்று ரிலீசாகி இருக்கிறது. இதில் அந்த கன்னியா ஸ்த்ரீ எப்படி தீய சக்தியாக மாறினார்? என்பது தான் கதை. டிரெயிலரின் ஆரம்பத்தில்லேயே “இறுதி வரை பாருங்கள் “ என ஒரு குறிப்புடன் தொடங்கி இருக்கின்றனர். அப்படி ஒரு திரில்லை ட்ரெயிலரில் ஒளித்து வைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ’காரின் ஹார்டி’.
திகில் பட விரும்பிகளுக்கு “THE NUN” திரைப்படம் நிச்சயமாக ஒரு விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது இந்த டிரெயிலர். வரும் செப்டம்பர் 7 அன்று இப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில், ரிலீசாகும் எனவும் ட்ரெயிலரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.