திரையுலகின் மோஸ்ட் வான்டேடு பியூட்டி - 10 வருடத்தில் 50 ஐ தொட்ட 'காஜல் அகர்வால்"

 
Published : Jun 19, 2017, 07:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
திரையுலகின் மோஸ்ட் வான்டேடு பியூட்டி - 10 வருடத்தில் 50 ஐ தொட்ட 'காஜல் அகர்வால்"

சுருக்கம்

the most wanted beauty actress kajal agarwal in started 50 th movie

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் "லட்சுமி கல்யாணம்" என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகம்  கொடுத்த இவருக்கு. முதலில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த பழனி மற்றும் பொம்மலாட்டம் படத்திற்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், டோலிவுட்டின் தவிர்க்க முடியாத பேரழகி.

சந்தமாமா, பவ்ருடு உள்ளிட்ட சில படங்கள் காலை வாரினாலும், மஹதீரா தந்த பிரம்மாண்ட வெற்றியால், போட்டியில் நானும் இருக்கிறேன் என்று தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் ஐ ஏம் அப்டேட்டபிள் என மெசேஜ் தட்டியவர்

மஹதீராவின் மகிமையால் டோலிவுட்டில் இவருக்கு ஏறுமுகமே. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. பின் இவர் நடித்த 'நான் மஹான் அல்ல', 'ஜில்லா','மாற்றான்','துப்பாக்கி' போன்ற படங்கள் மிக பெரிய ஹிட் படங்களாக அமைத்ததால் இவர் முன்னணி நாயகி பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

தென்னிந்திய திரைப்படத்துறையில் உச்சம்பெற்ற நடிகையாக இருந்தாலும் 5 ஆண்டுகள் மட்டுமே காலக்கெடு. அதற்குப் பிறகு கால்ஷீட் இன்றி பலர் காணாமல் போய்விடுகின்றனர்.

ஆனால் காஜல் அகர்வால் இதற்கு விதிவிலக்கு போல. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன்  நடித்து வருகிறார்.  கையில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கும் இவர் ஆல் டைம் பிஸி…

மாரிக்குப் பிறகு தமிழ்நாடு பக்கம் தலைவைக்காத காஜல் தனது 50 ஆவது திரைப்படமான நானே ராஜா நானே மந்திரி திரைப்படத்தில் ராணாவுக்கு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டாரோ அதே தேஜா தான் நானே ராஜே, நானே மந்திரி திரைப்படத்தின் இயக்குநர்.

நானே ராஜா நானே மந்திரி பட ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், செட்டில் வைத்தே தனது 32 வது பிறந்தநாளை காஜல் இன்று கொண்டாடி இருக்கிறார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!