
‘கோபாலபுரம் அபார்ட்மெண்ட் ஒன்றில் நள்ளிரவில் குரூப் டான்ஸர் வீட்டுக்கு விஷால் எகிறினார். அதற்கான சிசிடிவி ஆதாரம் உள்ளது என்று குற்றம் சாட்டிய விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது ராயப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் இரு வாரங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் விஷால் குறித்து பல அதிர்ச்சியான தகவல்களை விஸ்வதர்ஷினி வெளியிட்டிருந்தார். அதில் விஷால் கள்ளத்தனமாக ஒரு நடன நங்கையின் வீட்டுக்கு சுவரேறிக் குதித்தது உட்பட பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டதோடு, தன்னிடம் இன்னும் அவர் குறித்த ரகஸியங்கள் உள்ளதாகவும் தேவைப்பட்டால் அவையும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த அதிர்ச்சிகர செய்திகள் குறித்து இதுவரை விஷால் வாயே திறக்காத நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விஸ்வதர்ஷினி மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஸ்வதர்ஷினி தனது பக்கத்து வீட்டு சிறுமி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகவும் அது குறித்து தேசிய குழந்தைகள் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.