இந்த ஆண்டு உலகக் கோப்பையை 100% வெல்லப்போவது இந்தியாதான்...வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்...

Published : Jun 27, 2019, 04:07 PM IST
இந்த ஆண்டு உலகக் கோப்பையை 100% வெல்லப்போவது இந்தியாதான்...வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்...

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று தனது 6வது போட்டியில் ஆடிவரும் இந்திய அணி இறுதிப்போட்டியில் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருமா என்று ஒவ்வொரு இந்தியனும் ஏங்கிக்கொண்டிருக்க, அதே லார்ட்ஸ் மைதானத்தில் ‘83ம் ஆண்டு கோப்பையைத் தட்டி வந்த கபில்தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று தனது 6வது போட்டியில் ஆடிவரும் இந்திய அணி இறுதிப்போட்டியில் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருமா என்று ஒவ்வொரு இந்தியனும் ஏங்கிக்கொண்டிருக்க, அதே லார்ட்ஸ் மைதானத்தில் ‘83ம் ஆண்டு கோப்பையைத் தட்டி வந்த கபில்தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில்  இந்திப் படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ்-ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார்.

அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். சந்தீப் பட்டீலாக, அவர் மகன் சிரங் நடிக்கிறார். மற்றும் பங்கஜ் திரிபாதி, சஹிப் சலீம், சாஹில் கட்டார், தாஹிர் ராஜ் பாசின் உட்பட பலர் நடிக்கின்றனர். மே மாதம் 15 ஆம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்கி நான்ஸ்டாப்பாக நடந்து வருகிறது. இங்கு மட்டுமே மொத்தம் நூறு நாள் படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் ஜுல14 அன்று ஒரிஜினல் மேட்ச் முடிந்தவுடன் ‘83 படத்துக்காக கபில்தேவ் கப் வாங்கும் க்ளைமேக்ஸ் காட்சிகள்  இதே லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்பட உள்ளன.

ஆக இப்போதைக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு ஒரு கப் உறுதி. கோலி அண்ட் கோவினர் மனது வைத்தால் இரண்டாவது கப்பையும் தட்டிக்கொண்டு வரலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை