
பிக் பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியில் 16 வது போட்டியாளராகக் களம் இயங்கியிருக்கும் நடிகை மீரா மிதுன் மீது ஏற்கனவே ஏகப்ப்பட்ட மோசடி வழக்குகள் இருப்பதால் அவர் மிக விரைவில் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள மீராமிதுனிடமிருந்து இதற்கு முன்னர் மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டம் பறிக்கப்பட்டது. இவர் மிஸ் தமிழ்நாடு திவா என்ற தலைப்பில் அழகி போட்டி நடத்த முயன்று பிரச்சனையில் வேறு சிக்கினார். அப்போது அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகாரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இவர் அழகி போட்டி நடத்த முயன்ற போதே அதை தடுத்த ஜோ மைக்கேல் என்பவர் தற்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் "மீராமிதுன் மீது 3 காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம் அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் திடீரென விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றுவிட்டார்.
வழக்கு இருக்கும் ஒருவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அனுமதி கிடைத்தது என தெரியவில்லை. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது தெரிந்துவிட்டது. இனி நாங்கள் போலீசில் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்வோம். அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போலீசாரால் கைது செய்யப்படலாம். இவர் என்னை மட்டுமல்ல மொத்தம் 4 பேரை ஏமாற்றியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் 2-3 நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்துவிடும். அபிராமி, சாக்ஷி, மீரா மூன்று பேரும் முன்னரே அறிமுகமானவர் தான். மேலும் மீராவிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகிபட்டம் வேறு பெண்ணிற்கு வழங்கப்பட்டது. அந்த பெண்ணின் பாய் பிரெண்ட் தான் பீக்பாஸ் வீட்டிற்குள் இருக்கு இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன்" எனகூறினார்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் வைத்து தமிழ் அழகிப்போட்டி ஒன்றை மீரா நடத்த முயல, இவர் பெண்களை ஏமாற்றி தொழில் செய்கிறார் என்று அவரது போட்டியாளர்கள் நிகழ்ச்சியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.