தளபதி விஜய்யின் பரிசளிப்பு விழாவில்.. ரசிகர் செய்த செயல்! அரங்கத்தையே அதிர வைத்த தரமான சம்பவம்! வீடியோ..

By manimegalai a  |  First Published Jun 22, 2023, 5:39 PM IST

தளபதி விஜய் ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழாவில், தளபதியின் ரசிகர் ஒருவர் செய்த விஷயம் அனைவரது பாராட்டுகளையும் பெற்ற நிலையில், இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


தளபதி விஜய் ஜூன் 17ஆம் தேதி, தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த  1339 மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியது, அனைத்து தரப்பினரையும் கவனிக்க வைத்தது. அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். குறிப்பாக விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜர், ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்க கூடாது என்கிற விழிப்புணரவை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு, பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.

Tap to resize

Latest Videos

இந்த பரிசளிப்பு விழா, காலை 11 மணிக்கு துவங்கிய நிலையில், இரவு 10 மணியை தாண்டியும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் தன் கையாலேயே பொன்னாடை போத்தி பரிசு தொகையை விஜய் வழங்கினார். பேருக்கு நாலுபேருக்கு வழங்கி விட்டு, சென்று விடாமல்...  அனைத்து மாணவர்களையும் உற்சாகமாக பேசி ஊக்கப்படுத்தினார். விஜய்யின் இந்த செயல் ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றது.

அவ்வப்போது இடையே தண்ணீர் குடிக்க பிரேக் மட்டுமே சில நிமிடங்கள் எடுத்து கொண்டார். விஜய் பிரேக் சென்ற போது, அங்கு இருக்கக்கூடிய சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள கேமரா காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து  விஜய்யின் மேனேஜர் புஸ்ஸி ஆனந்த்  இது குறித்த அறிவிப்பை மேடையில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய்யின் ரசிகர் ஒருவர் அந்த கேமரா தன்னிடம் தான் உள்ளது என, எடுத்து வந்து கொடுத்துள்ளார். மேலும் இது ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமரா என கூறியபோதும் கூட அந்த ரசிகர் அந்த கேமராவை அபகரிக்கும் ஆசை இல்லாமல் எடுத்து வந்து கொடுத்தது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த ரசிகரின் செயலை பாராட்டி தளபதி விஜய், தன்னுடைய கையால் சால்வே அணிவித்து பாராட்டி கௌரவித்துள்ளார். அப்போது அந்த அரங்கமே கை தட்டல்களால் அதிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, "தளபதி ரசிகர்கள் என்னைக்குமே எந்த ஒரு விஷயத்துக்குமே ஆசைப்பட மாட்டார்கள், உழைப்பை மட்டுமே நம்புவார்கள். அதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய உதாரணம் என சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் மற்ற ரசிகர்கள். மேலும் இந்த கேமராவை திருப்பிக் கொடுத்த ரசிகர் ஒரு கேமரா மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!