பத்து தல படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்ரோல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், தொடர்ந்து உள்ளே இரு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். இவரது இசையில் இந்த ஆண்டு இதுவரை பத்து தல, பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்களிலுமே பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.
குறிப்பாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகின. இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் திரும்பிய பக்கமெல்லாம் படப்பாடல்களின் ரீல்ஸ் தான் ஆக்கிரமித்துள்ளன.
அந்த வகையில், பத்து தல படத்தில் அதிகம் கவனம் ஈர்த்த பாடலாக ராவடி பாடல் அமைந்திருந்தது. சுபா என்கிற இளம் பாடகி பாடி இருந்த இப்பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இதனால் திரையிலும் இப்பாடல் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.
இப்பாடலை மீம் கிரியேட்டர் ஒருவர் ட்ரால் செய்து இருந்தார். அந்த ட்ரோல் வீடியோ இணையத்தில் படு வைரல் ஆனது. இதைப்பார்த்த ஏ.ஆர்.ரகுமான், அந்தப் பாடலை மீம் கிரியேட்டர்களுக்கு போட்டியாக தானே ட்ரோல் செய்து வீடியோ ஒன்றை வெளியட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.