இந்தியாவின் மிக உயரிய மனிதர் குறித்து வாரிசு பேசும் பேச்சுகள் பகீர் ரகமானவை. பலமுறை எச்சரித்தும வாரிசு அந்த மனிதரை பற்றி பேசுவதை குறைத்துக் கொள்ளவில்லை. இந்தநிலையில் தான் சில மாதங்களுக்கு முன்னர் வாரிசு குறித்து அந்த விவகாரமான நடிகை போட்ட பேஸ்புக் பதிவு மீண்டும் வைரல் ஆனது. அதிலும் விரைவில் செய்தியாளர் சந்திப்பு என்று கூறி நடிகை அலறவிட்டார்.
பிரபல நடிகை ஒருவர் மூலமாக அரசியல் வாரிசு ஒருவரை அசிங்கப்படுத்த நடைபெற்ற முயற்சியை அசால்ட்டாக ஊதித்தள்ளியது அந்த வாரிசு தரப்பு.
நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரது அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பிரபலமானவர் அந்த விவகாரமான நடிகை. தெலுங்கில் ஒருபரபரப்பை ஏற்படுத்திவிட்டு சென்னை வந்த அவர் இங்கும் பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தார்.
அப்படி சென்னை வந்த புதிதில் நடிகர்கள் வரிசையில் அந்த அரசியல் வாரிசு குறித்தும் ஏடாகூடமான ஒரு தகவலை அவர் வெளியிட்டிருந்தார். அப்போது பத்தோடு பதினொன்னு என்கிற கணக்கில் அந்த வாரிசு குறித்த தகவல் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் வாரிசு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அடித்து தூள்பரத்திக் கொண்டிருக்கிறது.
அதிலும் இந்தியாவின் மிக உயரிய மனிதர் குறித்து வாரிசு பேசும் பேச்சுகள் பகீர் ரகமானவை. பலமுறை எச்சரித்தும வாரிசு அந்த மனிதரை பற்றி பேசுவதை குறைத்துக் கொள்ளவில்லை. இந்தநிலையில் தான் சில மாதங்களுக்கு முன்னர் வாரிசு குறித்து அந்த விவகாரமான நடிகை போட்ட பேஸ்புக் பதிவு மீண்டும் வைரல் ஆனது. அதிலும் விரைவில் செய்தியாளர் சந்திப்பு என்று கூறி நடிகை அலறவிட்டார்.
சொன்னடிபயே நடிகை செய்தியாளர் சந்திப்பை கூட்ட, பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் நடிகை பேசிய பேச்சுகள் புஸ் என்று போய்விட்டது. பொதுவாக நம்ம நடிகை யாரை பற்றி எது கூறினாலும் கடைசி வரை அதில் உறுதியாக இருப்பவர். எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் வந்து பாருங்கள் என்று துணிச்சல் காட்டுபவர். பிரபல நடிகர் ஒருவர் குறித்து வில்லங்க தகவல்களை வெளியிட, அவரது ரசிகர்கள் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படவில்லை.
பிறகு அந்த நடிகரே நேரில் கூப்பிட்டு சமாதானம் செய்ய வேண்டிய வகையில் சமாதானம் செய்த பிறகு தான் நடிகை அந்த நடிகர் பற்றி பேசுவதை நிறுத்தினார். ஆனால் செய்தியாளர்களை சந்தித்து ஒரு அறிக்கையை நடிகை தமிழிலில் வாசிக்க இது யாரோ எழுதிக் கொடுத்ததது போல் உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க, அந்த இடமே காரசாரமானது. இதில் வேடிக்கை என்ன என்றால், செய்தியாளர் சந்திப்பிற்கு மிக பிரபலமான பிஆர்ஓ நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்ததது தான்.
நம் நடிகையின் செய்தியாளர் சந்திப்பிற்கு எல்லாம் பிஆர்ஓ தேவையே இல்லை. ஏனென்றால் நடிகை செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றால் ஒட்டு மொத்த சேனல்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆஜராகிவிடும். காரணம் நடிகை கொடுக்கும் தகவல்கள் அப்படி. ஆனால் பிஆர்ஓ மூலமாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து விசாரித்த போது தான், வாரிசின் அரசியல் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல் நாள் பெட்டி பெட்டியாக கொடுத்து செட்டில் செய்ததடுன் பிரஸ் மீட்டுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்த கதை வெளியாகியுள்ளது.