
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்காக நள்ளிரவு 1 மணி காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இதற்கு புதுவை மாவட்ட ஆட்சியர் வல்லவன் சிறப்பு காட்சியை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இதனால் பல ரசிகர்கள் 1 மணி காட்சிக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, காலை படம் திரையிடப்படும் என கூறப்பட்டது. எனினும் அடுத்தடுத்து ரசிகர்கள் 'துணிவு' படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், அவர்களின் காட்சி நேரமும் தொடர்ந்து மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியரிடம் ரசிகர்கள் தரப்பில் இருந்தும், திரை அரங்க உரிமையாளர் தரப்பில் இருந்தும் கோரிக்கை வைகாப்பாத்து.
இதை அடுத்து நள்ளிரவு ஒரு மணி காட்சியை திரையிட ஆணையர் மீண்டும் அனுமதி கொடுத்தார். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அஜித் படத்தை ஒரு மணிக்கு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட புதுவை ரசிகர்களின் ஆசை நிறைவேறி உள்ளதால் இதனை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.