
’ஒரு நல்ல படத்தை கோடிக்கணக்குல செலவழிச்சி கொலை செய்யணுமா?என்று நடிகர் பிரசாந்தையும் அவரது தந்தை தியாகராஜனையும் ‘அசுரன்’தனுஷ் பயங்கர கிண்டலடித்து வருவதாக உதவி இயக்குநர் வட்டாரங்கள் தெரிவித்தன. அதுபோல் பிரசாந்துக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்ற செய்தியை முதன்முதலாக வாசித்தபோது லேசாக மயக்கமடைந்து பின் தெளிந்தாராம்.
தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த அக்டோபரில் வெளியான ‘அந்தாதுன்’படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததுடன் மிக கவுரமான மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. இப்படம் தேசிய விருதுகளை வெல்வதற்கு முன்பே தான் தமிழ் ரீ மேக் உரிமைகளை வாங்கி நடிக்க விரும்புவதாக தனுஷ் தனது பல பேட்டிகளில் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். அதையும் மீறி, பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே பின் வாசல் வழியாக அந்த இந்திப்படக் கம்பெனிக்குள் நுழைந்த பிரசாந்தின் தந்தை தியாகராஜன் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி அதை நேற்றே அறிவிப்பாகவும் வெளியிட்டுவிட்டார்.
வெறும் அறிவிப்போடு நின்றிருந்தால் பரவாயில்லை. படத்தின் நாயகன் பியானோ வாசிப்பவர் என்பதால் லண்டன் டிரினிடி கல்லூரியில் முறைப்படி பியானோ கற்ற பிரசாந்த்தான் இக்கதைக்குப் பொருத்தமானவர் என்றும் இன்றைக்கும் எங்கள் வீட்டில் இருக்கிற பியானோவில் பிரசாந்த் வாசித்தால்...அத்திவரதருக்குக் கூடுவதை விட அதிகக் கூட்டம் கூடும் என்கிற ரீதியில் ரீல் விட ஆரம்பித்துவிட்டார்.
ஒரு நல்ல படத்தைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பிரசாந்துக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்கிற தகவலையெல்லாம் நாம் வாழும் காலத்தில் கேட்டுத் தொலைக்கவேண்டியிருக்கிறதே’ என்று தலையில் அடித்துகொள்ளும் தனுஷ், ‘பாவம் ஒரு நல்ல படத்தை எத்தனை கோடி செலவழிச்சி கொலை செய்யப்போறாங்களோ’என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.