
விபத்தில் கீழே விருந்து காயமடைந்த 10 வயது சிறுவன் ஒருவன், தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது தெரியவர, மருத்துவம் பார்க்க ஒத்துழைப்பு தர மறுத்த அவனுக்கு பிகில் படத்தை காட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், சென்னை அண்ணா சாலையில் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது... எதிர்பாராத விதமாக சிறிய விபத்து ஏற்பட்டது. இதில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த சசிவர்ஷன் கீழே விழுந்ததில், தையல் போடும் அளவிற்கு அடிபட்டதுடன், சில சிராய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த சிறுவனை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனுக்கு அடிபட்ட காயத்தில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்ததால், மருத்துவர்கள் தையல் போடுவதற்கு முன், வலி தெரியாமல் இருக்கு போடப்படும் ஊசி போட முயன்றுள்ளனர். சிறுவனுக்கோ சிறிய வயதில் இருந்தே ஊசி போடுவது என்றால் அவ்வளவு பயம், கத்தி... கால்களை உதைத்து கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். ஒருவழியாக அங்கிருந்த தன்னார்வலர் ஒருவர் அவனிடம் நைசாக பேச்சு கொடுத்து சமாதானம் செய்துள்ளார்.
அப்போது சிறுவன் சசிவர்ஷன் தளபதி விஜய்யின் தீவிர ரசிகன் என்பது அந்த தன்னார்வலர்க்கு தெரிய வரவே, தன்னுடைய போனில் வைத்திருந்த பிகில் படத்தை போட்டு காட்டியுள்ளார். சிறுவனும் படத்தை பார்க்க துவங்கியதும், மருத்துவர்கள் ஊசியை போட்டு காயத்துக்கு தையல் போட்டு முடித்துவிட்டனர். இந்த சுவாரஸ்யம் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
சிறுவன் சசிவர்ஷன், மிகவும் ஆர்வமாக 'பிகில்' படத்தை பார்த்து கொண்டு வலி தெரியாமல் இருந்துள்ளார். இந்த தகவல் விஜய்யின் ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மேலும் தளபதிக்கு பெரியவர்கள், இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம் மட்டும் இல்லை, சிறுவர்களும் தீவிர ரசிகர்கள் தான் என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.