
பல நாள் தனிமையில் பழகி விட்டு திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்த நடிகையை பிரபல தயாரிப்பாளர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் ஹோட்டல் மாலினி என்றொரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமா தயாரிப்பு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பலமுறை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார் நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், நேற்று இரவு 10 மணி அளவில் நடிகை மால்வி மும்பையில் உள்ள ஒரு கபேயில் இருந்து காரில் வீட்டுக்கு செல்லும்போது நான்கு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் காயமடைந்த அவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.