"இளைஞர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் தரமணி": இயக்குனர் ராம்...

First Published Aug 8, 2017, 12:28 PM IST
Highlights
Tharamani is the youngsters life oriented movie director ram speech


இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும்   என்றுமே வரவேற்பை பெறும். அந்த விதத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம்  'தரமணி'.

இந்த திரைப்படத்தில் தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும். இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில் ,''அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன்  நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும்  உருவாகிய கதை தான் 'தரமணி'.  

உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி 'தரமணி' படத்தில் பேசியுள்ளேன்.

 இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. 'தரமணி' பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக 'தரமணி' இருக்கும் '' என்று கூறியுள்ளார்.

click me!