"தானா சேர்ந்த கூட்டம்" படத்திற்கு செக்...கவலையில் சூர்யா...

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 07:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
"தானா சேர்ந்த கூட்டம்" படத்திற்கு செக்...கவலையில் சூர்யா...

சுருக்கம்

thanaserntha kootam movie

நானும் ரௌடிதான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த விக்னேஷ் சிவன், தற்போது சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் "தானா சேர்ந்த கூட்டம்" என்கிற  படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் இந்த படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில்  வெளியாகி சூப்பர் ஹிட்டான "ஸ்பெஷல் 26" படத்தின் கதையை சுட்டு தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்த ஒரு சில நடிகர்களும்  இரண்டு கதையும் ஒரே போல் இருப்பதாக கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த அந்த படத்தின் உரிமையை பெற்று வைத்திருக்கும் தியாகராஜன் ஷாக் ஆகி, விசாரித்ததில் இரண்டு கதைகளும் ஒரே போல் இருப்பதாகவும், தான் உரிமம் வாங்கி வைத்திருக்கும் கதையை விக்னேஷ்சிவன் இயக்கி வருவதாக கூறி தடை கூற முடிவெடுத்துள்ளாராம்.

இதன் காரணமாக இந்த படத்திற்கு செக் வைத்துள்ளார் தியாகராஜன், மேலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது இதனால் சூர்யா மற்றும் படக்குழுவினர் சிறு கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

KS Chithra: 'மகளின் மரணத்துக்குப் பிறகு கோயிலுக்கே போகல, யாரையும் பார்க்கல' - மனம் திறந்த சித்ரா
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!