
இளையராஜா எஸ்பிபிக்கு தனது பாடல்களை பாடக்கூடாது என கூறி நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பலரும் தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த, நடிகர் மோகன் ராமன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"பாடல்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை, தயாரிப்பாளருக்கும் தான். பலருக்கு சொந்தமான ஒன்றின் ராயல்டி பணம் வசூல் செய்ய எப்படி நீங்கள் மட்டும் நோட்டீஸ் அனுப்ப முடியும் என்றும். பாடலாசிரியர் அல்லது தயாரிப்பாளர் உங்களுக்கு அனுமதி கொடுத்தார்களா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் வழக்கறிஞர் 'இளையராஜா பாடலை பாடி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் பாடகருக்கு தான் நோட்டீஸ் அனுப்பினோம். கோவில் கச்சேரியில் பாடுபவர்களுக்கு அல்ல' என சொல்லியிருப்பதை பார்த்தால், நீங்கள் பணம் தான் முக்கியம் என நினைப்பது தெரிகிறது.
நீங்கள் ஞானி என நினைத்தேன், ஆனால் ஒரு ஞானி இப்படி செய்யமாட்டார்" என தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.