
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ் மொழி படங்கள் மட்டும் இன்றி, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் தற்போது இந்தி படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் இவர், இவரின் வீடு அருகிலேயே வெர்சோவா என்கிற பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில், மார்க்கெட் விலையை விட அதிகமான தொகை கொடுத்து வீடு ஒன்றை வாங்கியதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து முதல் முறையாக தமன்னா வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மார்க்கெட் விலையை விட அதிக தொகை கொடுத்து நான் ஏன் ஒரு வீட்டை வாங்க வேண்டும். உண்மையில் ஒரு வீடு வாங்கி இருப்பது நிஜம். அந்த வீட்டில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தபின் பெற்றோருடன் அந்த வீட்டில் குடியேற உள்ளேன் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமன்னா வீடு வாங்கி இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது போல், அவர் அதிக விலை கொடுத்து வாங்க வில்லை என்கிற உண்மையும் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.