விரைவில் டும் டும் டும்! தமன்னா வெளியிட்ட தகவல்!

Published : Aug 06, 2019, 01:24 PM IST
விரைவில் டும் டும் டும்! தமன்னா வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

நயன்தாரா,  த்ரிஷாவை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் தமன்னா.  தற்போது 30 வயதை எட்ட உள்ள அவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  

நயன்தாரா,  த்ரிஷாவை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் தமன்னா. தற்போது 30 வயதை எட்ட உள்ள அவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,  ஓராண்டுக்கு நான்கு,  ஐந்து படங்களில் நடித்து வந்தேன். ஆனால் இப்போது தன்னுடைய படங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டேன். அதிக படங்களில் நடிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், கவர்ச்சியான வேடங்களில் ஏற்க மறுக்கிறேன் என்பதுதான்.

மேலும் தமிழ் சினிமாவில், மட்டுமின்றி தெலுங்கு, இந்தி,  உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய வெற்றிக்கு காரணம் உண்மையாக வேலை செய்வது தான்.  செய்கிற வேலையை மனபூர்வமாக செய்தாலே கண்டிப்பாக வெற்றி தேடிவரும்.  குறிப்பாக படப்பிடிப்பில் இருக்கும்போது எனது அம்மா போனில் பேசினால் கூட எடுக்க மாட்டேன்.  போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுவேன் என்னுடைய குணம் தெரிந்த நண்பர்கள் பலர் தனக்கு போன் செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

பின் திருமணம் பற்றி பேசிய அவர், திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. ஆன்மா திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற முடிவு செய்துள்ளார் அதனால் மாப்பிள்ளை தேடுதல் வேட்டையில் அவர் பிஸியாக இருக்கிறார் திருமண விஷயத்தை எனது பெற்றோர் முடிவுக்கே விட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!