மைக்கில் மதன காமராஜன் படத்தில் குஷ்பு செய்த வேலையை வெளியே கூறிய கமல்!

Published : Aug 06, 2019, 12:30 PM IST
மைக்கில் மதன காமராஜன் படத்தில் குஷ்பு செய்த வேலையை வெளியே கூறிய கமல்!

சுருக்கம்

நடிகர் கமலஹாசன் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ்  போட்டியாளர்கள் அனைவரும், கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.  

நடிகர் கமலஹாசன் தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அதற்கு, கமல்ஹாசனும் பொறுமையாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினார். லாஸ்லியா மன்மதன் அம்பு படத்தில் வரும் மிகவும் வித்தியாசமான பாடலான 'நீ நீல வானம்' படம் குறித்த கேள்வியை எழுப்பினர். 

நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,  நடிகர் சங்கத்தை பொருத்த வரை, நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழிநடத்தி வருகிறேன்.  எம்.ஜி.ஆருடன் நாளை நமதே படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன். நாளை நமதே படத்தை ரீமேக் செய்ய இயலாது இதனால் அந்த படத்தின் தலைப்பை மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். அதே போல் சிவாஜி நடித்துள்ள 'தேவர்மகன்' படத்தை ரீமேக் செய்து, அதில் சிவாஜி கணேசன் நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறினார்.

பின்  உலகின் தலைசிறந்த காதல் ராவணனின் காதல், பத்து தலைகள் இருந்தாலும் அவருக்கு ஒருதலைக் காதல்தான். நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் யாராவது காதலித்தால் என்றால் அவருக்கு எத்தனை அன்பும் தெரியும் இருந்திருக்கவேண்டும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மருதநாயகம் படம் குறித்த கேள்வி எழுப்பிய போது, மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என பதில் அளித்தார். 

பின் இதை தொடர்ந்து நடிகை குஷ்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,   குஷ்புவுடன் நடித்த படங்களில் மைக்கேல் மதன காமராஜன் எனக்கு மிகவும் பிடித்த படம் அந்த படத்தில் நான்கு கதாநாயகிகள் இருந்தனர். ஆனாலும் குஷ்பு உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டே இப்படத்தில் பணியாற்றினானார் என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!