தற்போது தளபதி மகன் ஜேசன் சஞ்சயின் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் “மாஸ்டர்”. இதில் முதல் முறையாக விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய்யின் செல்ல மகளான திவ்யா சாஷாவின் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. சென்னையில் உள்ள சர்வதேச பள்ளியில் பயின்று வரும் திவ்யா சாஷா, தோழிகளுடன் சேர்ந்து கூல் போஸ் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!
தற்போது தளபதி மகன் ஜேசன் சஞ்சயின் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் “வேட்டைக்காரன்” படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடலுக்கு அப்பா விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார் ஜேசன் சஞ்சய். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதிக்கு வரும் ஆப்பு... எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார் போலயே...!
அப்படியே அச்சு அசலாக தளபதி விஜய் போலவே இருக்கும் ஜேசன் சஞ்சய், கையில் கேமராவுடன் நின்று கொண்டிருப்பது போன்ற இந்த போட்டே சோசியல் மீடியாவில் செம்ம ஜோராக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போல அந்த புகைப்படத்தை #இளையதளபதி என்ற ஹேஷ்டேக்குடன் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.