தளபதி நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே தன்னை அரசியல் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி உள்ள தளபதி விஜய், அதனை முறையாக தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துவிட்டார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை, 234- தொகுதியிலும் நேரடியாகவோ அல்லது கூட்டணி கட்சிகளுடனோ விஜய் சந்திக்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
விக்ரமின் 'தங்கலான்' திரையரங்கில் மின்னியதா? விமர்சனம் இதோ!
மேலும் தன்னை முழு அரசியல் தலைவராக வெளிக்காட்டி கொள்ள, மக்களின் நலனுக்காக போராடிய தலைவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, பசி தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா போன்ற பல விஷயங்களை செய்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்.
தற்போது தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்தில் நடித்து நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இன்றைய தினம் இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த தகவலை 'கோட்' பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி அமரன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய 69 ஆவது படத்தை, கடைசி படமாக நடிக்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அரசியல் பணியில் முழுமையாக இறங்க விஜய் காத்திருக்கிறார். அதே போல் விஜய் 69ஆவது படத்தை நடிப்பதற்கு முன்பே, மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றையும் நடத்த முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இன்று 76-ஆவது சுதந்திர தின விழா, இந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தளபதி விஜய் முதல் ஆளாக முந்திக்கொண்டு ரசிகர்களுக்கும், இந்திய மக்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள போஸ்டர் இதோ...