
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் - விஜய்சேதுபதி முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை ஓட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், பொங்கல் விருந்தாக படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
கொரோனா காலத்தில் எவ்வளவோ கோடிகளை கொட்டிக்கொடுத்தும் ஓடிடி நிறுவனங்களின் ஆஃபரை ஏற்காமல் தியேட்டரில் தான் படத்தை வெளியிடுவேன் என விஜய் உறுதியாக இருந்தார். இதற்காக முதல்வரைக் கூட சந்தித்து தியேட்டர்களில் 100சதவீத இருக்கைக்கு அனுமதி கோரியிருந்தார். தற்போது தமிழக அரசும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, ஓட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சி அடைந்தது.
மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் முதல் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய்யின் மாஸ் டான்ஸ் பெர்பாமன்ஸ் உடன் தற்போது வாத்தி கம்மிங் பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கல்லூரி பேராசிரியராக வரும் விஜய், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களோ ச்சே... இந்த மனுஷனுக்கு மட்டும் தான் ஸ்டைலும், மாஸும் அப்படியே இருக்கு என புகழ்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.