மாஸ்டர் படத்தை கைப்பற்றிய முன்னணி ஓடிடி தளம்... தயாரிப்பாளர் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Nov 27, 2020, 8:16 PM IST
Highlights

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல் தளபதி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

 

இதையும் படிங்க: இங்க நயன்தாரா... அங்க சமந்தா... டாப் லிஸ்டை பார்த்து வயிறெரியும் இளம் நடிகைகள்...!

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. தீபாவளி ரிலீஸாக வெளியான மாஸ்டர் பட டீசர் இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்து 40 மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்திருந்தாலும், குறைந்தது 90 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி கொடுத்தால் தான் பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய வாய்ப்பாக இருக்கும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகுமா? என்ற சந்தேகம் வலுத்து வந்தது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல் தளபதி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: கொழு, கொழு குழந்தை முதல் ‘குட்டி’ நயனாக மாறியது வரை... அனிகாவின் யாரும் அதிகம் பார்த்திடாத போட்டோஸ்....!

முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் மாஸ்டர் படத்தை கோடிகளைக் கொட்டிக்கொடுத்து வாங்கியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் லலித் குமார் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள தகவலின் படி, படத்தை ஓடிடிக்கு விற்றுள்ளதாகவும், ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸாகுமா?, ஓடிடியில் வெளியாகுமா? என்பது குறித்து இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிட்டதற்காக சூர்யா ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில், இந்த தகவல் தளபதி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!