
இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின் போது உறுதி அளித்ததை போல 2018-ஆம் ஆண்டுக்குள் படத்தை ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்நிலையில், 'கன்னி ராசி ' திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது.
சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மீடியா டைம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி விநியோக உரிமை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.இதற்காக படத்தின் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு ரூ.17 லட்சத்தை கொடுத்துள்ளோம் . ஆனால், ஒப்பந்தத்தின்படி கடந்த 2018-ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவும் இல்லை, அதே நேரத்தில் விநியோக உரிமை வேறொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்களிடம் வாங்கிய 17 லட்சம் தொகையை வட்டியுடன் சேர்த்து கொடுக்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதையும் படிங்க: கொழு, கொழு குழந்தை முதல் ‘குட்டி’ நயனாக மாறியது வரை... அனிகாவின் யாரும் அதிகம் பார்த்திடாத போட்டோஸ்....!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கன்னி ராசி' திரைப்படம் வெளியாக இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.