மறுபடியும் அஜித்தை காப்பியடித்த விஜய்... ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை போடும் தல-தளபதி ஃபேன்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 09, 2020, 05:23 PM IST
மறுபடியும் அஜித்தை காப்பியடித்த விஜய்... ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை போடும் தல-தளபதி ஃபேன்ஸ்...!

சுருக்கம்

ஸ்கீரினில் தான் விஜய்யை பார்க்க முடியவில்லை, போஸ்டரிலாவது பார்க்க முடிந்ததே என்று மகிழ்ச்சியில் இருந்தனர். 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாரான மாஸ்டர் படம் இன்று வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் உலகம் முழுவதையும் ஆட்டிவைக்கும் கொரோனா வைரஸ் தளபதி படத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது, தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

அதனால் திட்டமிட்டபடி மாஸ்டர் படத்தை ரிலீஸ்  செய்யாமல் மாஸ்டர் படக்குழு தத்தளித்து வருகிறது. சொன்ன தேதிக்கு படம் ரிலீஸ் ஆகாததால் தளபதி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவர்களை குஷியாக்கும் விதமாக மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் "ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்" என்று குறிப்பிட்டிருந்தது. 

ஸ்கீரினில் தான் விஜய்யை பார்க்க முடியவில்லை, போஸ்டரிலாவது பார்க்க முடிந்ததே என்று மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் மாஸ்டர் போஸ்டரில் விஜய் கொடுத்துள்ள போஸ்  குறித்து தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் கட்டிப்புரண்டு வருகின்றனர். அதாவது அஜித் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான என்னை அறிந்தால் படத்திலிருந்து போஸ்டருக்கான ஐடியாவை சுட்டதாக தல ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர். 

ஏற்கனவே இதே படத்தில் இருந்து தான் முதல் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதாகவும் அஜித் ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பினர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் அடிக்கும் கூத்தை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்