சோகத்தில் தலை கவிழ்ந்திருக்கும் விஜய்...“மாஸ்டர்” டீம் வெளியிட்ட லேட்டஸ்ட் போஸ்டருக்கு அர்த்தம் என்ன?

By Kanimozhi PannerselvamFirst Published Apr 9, 2020, 4:24 PM IST
Highlights

இதனால் கொதித்து போயிருக்கும் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை “மாஸ்டர்” படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாரான படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து, இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்துவிட்டது. 

இசைவெளியீட்டு விழாவின் போது ஆரம்பித்த கொரோனா சிக்கல் இன்னம் தீர்த்தபாடு இல்லை. மற்றவர்களை எல்லாம் விட தளபதியைத் தான் கொரோனா சுழட்டி அடிக்குது. ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று படக்குழுவினர் தீயாய் வேலை செய்து ஷூட்டிங்கை முடித்தனர். 

இதையும் படிங்க: “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

ஆனால் தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அதனால் “மாஸ்டர்” படம் சொன்ன தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. இதனால் கொதித்து போயிருக்கும் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை “மாஸ்டர்” படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

அந்த போஸ்டரில் சோகத்தில் மூழ்கி இருக்கும் விஜய் தலை குனிந்து எதையோ யோசித்து கொண்டிருக்கிறார். அத்துடன் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு செய்தியையும் பதிவிட்டுள்ளது. அதில் நீங்கள் எப்படி எங்கள மிஸ் பண்றீங்களோ, அதே மாதிரி நாங்களும் உங்களை மிஸ் பண்றோம். யாராவது ஒரு மாஸ்டர் மைண்ட் விரைவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து முற்றுப்புள்ளி வைப்பார். மிகவும் பலமாக மீண்டு வருவோம் நண்பா. வீட்டில் இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளனர். 

We miss you, just like how you miss us!

Hoping that a master-mind finds an antidote and put an end to Corona!

We'll come back stronger nanbaa.
Stay home, Stay Safe. pic.twitter.com/MouTeUqlGn

— XB Film Creators (@XBFilmCreators)

இதையும் படிங்க: 

அத்துடன் "ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்" என்று போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தை எடுக்க ஆரம்பித்ததில் இருந்து ரெய்டு, போராட்டம், கொரோனான்னு அடுத்தடுத்து சிக்கலாக வருகிறது. அதை குறிக்கும் விதமாக தான் விஜய் சோகமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளனர் போல. 
 

click me!