அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘மாஸ்டர்’... அவசரத்திற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 27, 2021, 11:52 AM ISTUpdated : Jan 27, 2021, 11:54 AM IST
அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘மாஸ்டர்’... அவசரத்திற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம்...!

சுருக்கம்

தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.  முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

 

இதையும் படிங்க: உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஸ்லீவ் லெஸ் உடையில்... பிக்பாஸ் ஷிவானியின் அசத்தல் போட்டோ ஷூட்...!

50 சதவீத ஆக்குபன்ஸியிலும் மாஸ்டர் திரைப்படம் மாஸ் காட்டியது முதல் மூன்று நாட்களிலேயே வெட்ட வெளிச்சமானது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் அடுத்தடுத்து சாதனை படைத்தது. உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ள மாஸ்டர் திரைப்படம். தமிழகத்தில் மட்டும் 110 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது வரை தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளைச் சேர்ந்த ப்ரைம் வாடிக்கையாளர்கள் வரும் 29ம் தேதி முதல் மாஸ்டர் திரைப்படத்தை கண்டு ரசிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: இது தான் கல்யாண கலையா?... சிக்கென்ற அழகுடன் பட்டுப் புடவையில் ஜொலிக்கும் வரலட்சுமி...!

தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள விளக்கத்தில், “அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?