கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Jun 22, 2025, 07:01 AM IST
Thalapathy vijay

சுருக்கம்

Thalapathy Vijay Net Worth Details : தளபதி விஜய்யின் சம்பளம் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்து வந்த நிலையில் இப்போது அவருடைய மொத்த நிகர சொத்தின் மதிப்பும் அதிகரித்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Thalapathy Vijay Net Worth Details : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ந் தேதி 1974-ம் ஆண்டு பிறந்த ஜோசப் விஜய் தான் இன்று ரசிகர்கள் தளபதியாக கொண்டாடி வரும் விஜய். இன்று தனது 51ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்பாவின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய விஜய், சினிமா தான் எதிர்காலம் என்று அப்போதே முடிவு செய்துவிட்டார். நடிக்கும் ஆர்வத்தால் கல்லூரி படிப்பையும் பாதியிலேயே கைவிட்டார் விஜய்.

விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு 

தாயார் ஷோபா திரைக்கதை எழுத, தந்தை சந்திரசேகரின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். அந்த தலைப்புக்கு ஏற்ப இப்போதைய உயரத்தை விஜய் எட்டுவார் என்று, யாரும் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். விஜய்யின் ஆரம்ப கால சினிமா வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ்.ஏ.சி தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முதல் படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திராத விஜய்க்கு, பட்டிதொட்டியெங்கும் அறிமுகம் கிடைத்திட வேண்டும் என அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு தான் விஜய்காந்த் உடன் விஜய்யை இணைத்து அவர் இயக்கிய செந்தூரப்பாண்டி திரைப்படம். அப்படத்தின் மூலம் எஸ்.ஏ.சி எதிர்பார்த்தது நடந்தேறி விஜய் கிராமங்களுக்குள்ளும் ஊடுருவினார்.

பூவே உனக்காக 

4 பைட்டு, 5 பாட்டு என்று ஒரு பார்முலா வளையத்துக்குள் சாதாரண ஹீரோவாக வலம் வந்த விஜய்யை 1996-ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தின் மூலம், வெளியே கொண்டு வந்தார் இயக்குனர் விக்ரமன். 1998-ல் சங்கிலி முருகன் தயாரிப்பில் பாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் தமிழ் மக்கள் விஜய்யை தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக கொண்டாட தொடங்கினர்.

இப்படி சினிமாவில் மளமளவென வளர்ந்து வந்தபோதே கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி குடும்பத்தினர் சம்மதத்தோடு தன்னுடைய காதலி சங்கீதாவை கரம்பிடித்தார் விஜய். திருமணத்துக்கு பின்னர் விஜய்யின் சொந்த காஸ்டியூம் டிசைனராகவும் மாறிவிட்டார் சங்கீதா. மனைவி வந்த பின்னர் குஷி, ப்ரண்ட்ஸ், யூத், பிரியமானவளே என வரிசையாக ஹிட் படங்களை கொடுக்க தொடங்கினார் விஜய்.

விஜய்யின் கில்லி படம் : 

அதிலும் 2005-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. அப்படத்தை தமிழ்நாடே கொண்டாடி தீர்த்தது. சொல்லப்போனால் சிறு குழந்தைகள் கூட விஜய்யின் ரசிகர்களாக மாற ஆரம்பித்தது அப்படத்தின் மூலம் தான். கில்லி பட விஜய்யின் திரை சரித்திரத்தையே மாற்றியதோடு, அவருக்கு நிரந்தர இடத்தையும் பெற்றுத் தந்தது.

ரஜினிக்கு பின் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் ஹீரோ விஜய் தான், திறமையாக டான்ஸ் ஆடும் தென்னிந்திய ஹீரோக்களில் விஜய் முதன்மையானவர் என மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். நடனம் நடிகருக்கு முக்கியம் என்றாலும் சக நடிகர்கள் பலரும் முயற்சிக்காத காலகட்டத்திலேயே சொந்தக் குரலில் பாடத்தொடங்கினார் விஜய். தற்போது வரை லியோவில் நான் ரெடி தான் வரவா, கோட் படத்தில் விசில் போடு என அந்த காந்தக் குரல் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

விஜய்யின் நிகர சொத்து மதிப்பு:

நடிகர் விஜய் காதலுக்கு மரியாதை மற்றும் திருப்பாச்சி ஆகிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார் விஜய். இப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வரும் விஜய் இன்று ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பணக்கார நடிகராக வலம் வரும் விஜய், சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின் படி ரூ.474 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்களுக்கு விஜய்யை விட கம்மியான சொத்துக்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார். கடைசி படமாக ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தளபதி விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று தளபதி விஜய் கூறிய நிலையில் அவரது கடைசி படமாக ஜன நாயகன் படம் உருவாகி வருகிறது. 

விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் : 

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், வரலட்சுமி சரத்குமார், பாபா பாஸ்கர், கௌதம் மேனன், நரைன், பிரகாஷ் ராஜ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்தப் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் தனக்கான அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ