அடி தூள்... தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸை உறுதி செய்த படக்குழு..! உட்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Jun 18, 2021, 6:19 PM IST
Highlights

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது. 
 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்காக பிரதியாக செட் அம்மைக்கும் பணி ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முதல் முதலாக விஜய்யை வைத்து 'தளபதி 65 ' ஆவது படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சுமார் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.

அதன்படி, தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. தளபதி பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்தை முன்தினம் 6 மணியில் இருந்தே தூக்கிவாங்கி விடுவார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை.

Enna nanba? First look ah? pic.twitter.com/11buRhwU3Y

— Sun Pictures (@sunpictures)

 

click me!