
அட்லீ - விஜய் கூட்டணியில் திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது "கைதி" பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார்.
சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலேஜ் புரொபசராக விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் உள்ள பிரபல கல்லூரிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லீக் ஆகி வைரலாகின. மேலும் படத்திற்கு ”சம்பவம்” என தலைப்பு வைக்க உள்ளதாகவும், அதே வார்த்தையில் ஆரம்பிக்க உள்ள மாஸ் ஓப்பனிங் சாங் ஒன்றை விஜய் பாட உள்ளதாகவும் வதந்திகள் தீயாய் பரவி வந்தன. இதை உண்மை என்று நம்பிய விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #Sambavam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
எனவே தளபதி 64 படத்தின் தலைப்பு குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த படக்குழுவினர். விஜய் படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை என்றும், அதனால் தலைப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களின் தலையில் இடியாய் இறக்கியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.