சுறுசுறுப்பாகும் விஜய் 63 பட வேலைகள்! அசத்தலான கேமரா மேன் படக்குழுவில் இணைந்தார்!

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 12:24 PM IST
Highlights

விஜய் நடிக்க உள்ள தளபதி 63 படத்தின் ஒளிப்பதிவாளராக, ஜி.கே.விஷ்ணு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய், தற்போது தளபதியாக புரமோஷன் ஆகியுள்ளார்.

விஜய் நடிக்க உள்ள தளபதி 63 படத்தின் ஒளிப்பதிவாளராக, ஜி.கே.விஷ்ணு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய், தற்போது தளபதியாக புரமோஷன் ஆகியுள்ளார். அவர் நடித்துள்ள சர்கார் படம், வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அவரது பெயர், தளபதி விஜய் என வருகிறது. இளைய தளபதியாக இருந்தவர், தளபதியாக மாறிய நிலையில், சர்காருக்கு அடுத்து, விஜயின் 63வது படத்தை, அட்லீ இயக்க உள்ளார். 

ஏற்கனவே, விஜயுடன், தெறி, மெர்சல் படங்களில் கரம் கோர்த்துள்ள அட்லீ, அவ்விரு படங்களையும் மாஸ் மசாலா படங்களாக இயக்கி, ஹிட் கொடுத்துள்ளார். இதனால், விஜயின் ஃபேவரைட் இயக்குனராகவும் அவர் மாறியுள்ளார். அது மட்டுமின்றி, விஜயின் ரசிகர்களிடையேயும் அட்லீக்கு நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில், விஜயை வைத்து அவர் இயக்க உள்ள புதிய படத்திற்கு, தற்சமயம், தளபதி 63 என்றே பெயரிடப்பட்டுள்ளது. வரும் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் எனவும் நாள் குறிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சர்கார் பணிகள் முடிந்ததால், தற்போது தளபதி 63க்கான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், மெர்சல் படத்தில், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஜி.கே.விஷ்ணுவை மீண்டும், தளபதி 63க்கும் ஒளிப்பதிவாளராக நியமிக்க, அட்லீ முடிவு செய்துள்ளாராம். இதற்கான ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளதாக, படக்குழு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. மெர்சல் படத்தின் சிறப்பான ஒளிப்பதிவுக்காக, ஏற்கனவே, விஷ்ணு பல தரப்பிலும் பாராட்டுகள் பெற்றவர் ஆவார். 

இதேபோன்று, தளபதி 63 படத்தின் எடிட்டராக, ரூபனை, அட்லீ தேர்வு செய்துள்ளார். ரூபன்தான், அட்லீயின் ஆஸ்தான விஷூவல் எடிட்டர் ஆவார். இவர்கள் 2 பேரும் ஏற்கனவே, ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களில் வெற்றிக்கூட்டணி அமைத்திருந்தனர். தற்போது இந்த படத்திற்கும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!