‘தலைவி’,‘குயின்’ பட விவகாரம்... ஜெ.தீபா தொடந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 15, 2020, 12:55 PM IST
Highlights

இந்த படம் மற்றும் வெப் சீரிஸுக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழியில் இயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை  இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.

 

இதையும் படிங்க: இது உடலா? உடையா?... உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.....

இந்த படம் மற்றும் வெப் சீரிஸுக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடையை தந்தையை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஜெ.தீபா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

 

இதையும் படிங்க: துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து... விஜய் சேதுபதியின் தவறை நாசூக்காக சுட்டிக்காட்டிய பாரதிராஜா...!

இதற்கு மறுப்பு தெரிவித்த பட நிறுவனம் தலைவி படத்தின் கதையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஜெ.தீபா பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக கூறியது. இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகள் முழுமையாக விசாரித்து முடிக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

click me!