இந்தப்படம் பெரிதல்ல சகோதரா விட்டுவிடுங்கள்..! விஜய் சேதுபதிக்கு நேரடியாகவே கோரிக்கை வைத்த சேரன்!

By manimegalai aFirst Published Oct 15, 2020, 12:21 PM IST
Highlights

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், திறமையான நடிப்பால் மக்கள் செல்வன் என பெயர் எடுத்துள்ளவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் முதல் முறையாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
 

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், திறமையான நடிப்பால் மக்கள் செல்வன் என பெயர் எடுத்துள்ளவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் முதல் முறையாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானபோது, அதில் அச்சு அசல், முத்தையா முரளிதரன் போலவே காட்சி அளித்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர், இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க கூடாது என பிரபலங்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களும், வெளிநாட்டுவாழ் தமிழர்களும் ஒரு சில திரையுலக பிரபலங்களும் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி வருகின்றனர்

இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் சீனு ராமசாமி, பாரதிராஜா, உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும், வேல்முருகன் உள்ளிட்ட ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, இயக்குனர் சேரனும் ட்விட்டர் மூலம்ம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.  அந்த வகையில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ’உங்களை வாழ வைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? என்ற கேள்வி எழுப்பியதோடு, உங்கள் நடிப்பு தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது, எனவே இந்த படத்தில் நடிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் சகோதரா’ என்று அறிவுரை கூறியுள்ளார்.  இப்படி தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புவதால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது. pic.twitter.com/o0raxEercb

— Cheran (@directorcheran)

click me!