ச்சே! என்ன அழகு... "தலைவர் 168" படத்தில் மீனா லுக் பார்த்தீங்களா... தீயாய் பரவும் போட்டோ...!

Published : Dec 25, 2019, 01:42 PM IST
ச்சே!  என்ன அழகு... "தலைவர் 168" படத்தில் மீனா லுக் பார்த்தீங்களா... தீயாய் பரவும் போட்டோ...!

சுருக்கம்

மேலும் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பார்ட்டில் மீனாவுடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் ஒரே மூச்சாக நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தலைவரோட சுறுசுறுப்பு யாருக்கும் வராது என இளம் தலைமுறை ஹீரோக்களே வாய் பிளக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். 

மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். "தலைவர் 168" படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் குஷ்பூ வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், "தலைவர் 168" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் மீனாவுடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

'எஜமான்' படத்தில் பார்த்த அதே மீனாவை நினைவுபடுத்தும் வகையில் மங்களகரமாக இருக்கும் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. கழுத்து நிறைய நகை, பட்டுப் புடவையில் பளபளவென ஜொலிக்கும் மீனாவை ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் ரசித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?