
இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவரிடமும் நெருங்கிய பழகியவர்களுக்கு தெரியும்.
ஆனால் அதே நேரத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போடும் சண்டை உலகமே அறிந்தது தான்.
குறிப்பாக இருவரில் ஒருவர் படம் வெளியாகும் போது இன்னொரு தரப்பு கலாய்ப்பதும், அதற்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தல, தளபதி ரசிகர்கள் ஒருசில இடங்களில் ஒற்றுமையாக இருக்கும் அபூர்வ சம்பவங்களும் நடப்பது உண்டு.
ஜனவரி 12ல் வெளியாகவுள்ள விஜய்யின் 'பைரவா' படத்திற்கு தல ரசிகர்கள் கட் அவுட் வைத்து அந்த படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.
இந்த கட்-அவுட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கட்-அவுட் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.