தாறுமாறான வசூலில் டாப்கியரில் அஜித்! மிரண்டு போன ரஜினி டீம்... தலைவனை வெச்சு செய்யும் தல!

By Vishnu PriyaFirst Published Jan 11, 2019, 2:47 PM IST
Highlights

ரசிகர் மன்றமே இல்லாத ஒரு ஹீரோவால் தனக்கு இப்படியொரு அடி விழும் என்று சத்தியமாய் யோசித்திருக்கவே மாட்டார் ரஜினிகாந்த்.

ரசிகர் மன்றமே இல்லாத ஒரு ஹீரோவால் தனக்கு இப்படியொரு அடி விழும் என்று சத்தியமாய் யோசித்திருக்கவே மாட்டார் ரஜினிகாந்த்.

அந்தளவுக்கு விஸ்வாசத்தின் விஸ்வரூபம், பேட்டயை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ’குடும்பங்கள் கொண்டாடும்!’ எனும் வார்த்தையை, படம் பார்த்த அத்தனை பேரும் உதிர்த்ததன் விளைவாக ஃபேமிலி ஆடியன்ஸ் தல படத்தை நோக்கிப் படையெடுப்பதால் இரண்டாம் நாளிலேயே பேட்ட வசூலில் சின்னதாய் ஓட்ட! என்கிறது அதிகாரப்பூர்வ தகவல்.  

கடந்த ஆண்டில் விஸ்வாசம் படத்தை துவக்கியபோதே ‘2019 ஜனவரி 10! அஜித்துக்கு ராசியான வியாழக்கிழமையில் ரிலீஸ்!’ என்று சொல்லியேதான் பூஜை போட்டார்கள். ஆனால் அதன் பிறகு உருவாக துவங்கிய ரஜினியின் பேட்ட படமோ பொங்கல் ரிலீஸ் என்று திட்டமிடப்பட்டு உருவாக்கப்படவில்லை, அப்படியே வந்தாலும் அஜித் பட ரிலீஸ் அன்றே தாங்களும் வரும் எண்ணமும் இல்லை. தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் சிங்கிளாய் ரிலீஸ் ஆகி கெத்து வசூல் காட்டியது போல் பொங்கலுக்கு தலயின் விஸ்வாசம் மட்டும் சிங்கிள் சிங்கமாய் வருமென்று நினைத்தார்கள்.

 

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேண்டுமென்றே பொங்கல் போட்டியில் குதித்தது ரஜினியின் படம். அதிலும் வழக்கமான வெள்ளிக்கிழமை ரிலீஸ் இல்லாமல், அஜித்துக்கு போட்டியாக வியாழன் ரிலீஸுக்கு வந்தார் ரஜினி. அதுவரையில் ரஜினி பட தரப்பின் நோண்டல்களுக்கு பதில் சொல்லாமல்தான் இருந்தார் தல. ஆனால் ரிலீஸ் வரையில் சிக்கல்களை கிளப்பியதால், பேட்ட டிரெய்லருக்கு பின் வந்த விஸ்வாசம் டிரெய்லர் முழுக்க முழுக்க ரஜினியை துவைத்து தொங்க போட்டது. டிரெய்லர் மூலமாகவே ‘நம்ம படங்கள் ரிலீஸாகட்டும். மாஸ்லேயும், வசூல்லேயும் உங்களை வெச்சு செய்றேன் சார்!’ ரஜினிக்கு மறைமுகமாக சவாலே விட்டார் அஜித். 

ஆனால் ரஜினி தரப்போ ‘தலைவன் ரஜினி, மல்ட்டி ஸ்டார்ஸ், சூப்பர் ஹிட் ஆல்பம்ன்னு பக்கா காம்போவுல இருக்கோம். மரண மாஸ் வெற்றி.’ என்று நம்பி, தனி கெத்துடன் ரிலீஸுக்கு வந்தனர். வெறித்தனமாக இரண்டு படங்களுமே மோதிக்கொண்டதில், முதல் ஷோவே, யார் ஹிட்? என்பதை அறிவித்துவிட்டது. ரஜினியின் பேட்டயை அடிச்சு தூக்கிவிட்டது அஜித்தின் விஸ்வாசம்! என்று எல்லா இடங்களில் இருந்தும் எக்கச்சக்க பாராட்டுகள். தனி நபராக நின்று ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி, தரலோக்கலாக பிரித்து மேய்ந்துவிட்டார் அஜித்! என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். விவேகம் நஷ்டத்தால் நொந்து கிடந்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் பெரும் உற்சாக வெள்ளத்தில் இருக்கிறது. அந்தளவுக்கு வசூல் புயல். 

அஜித் எனும் ஐகானுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினால் அவ்வளவு எளிதாக ஜீரணிக்கவே முடியவில்லை! என்கிறார்கள் அவரை நன்கு நெருங்கி நிற்கும் நபர்கள். காலா, கபாலி, 2.0 என தனது படங்கள் ஜெயிக்காத போது கூட பெரிதாய் வருந்தாத ரஜினி, அஜித் எனும் ஜூனியரிடம் வாங்கியிருக்கும் அடியால் பெரும் காயப்பட்டிருக்கிறார்! என வருந்துகிறார்கள்.  

அதேவேளையில் 2019ஐ மாஸ் ஹிட்டுடன் துவக்கியிருக்கும் அஜித், இந்த வெற்றியை தன் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் வழக்கம்போல் செம்ம அமைதியாக இருக்கிறார். தலயின் இந்த தாறுமாறு வசூல் வெற்றி மற்றும் படத்தின் வெற்றியை தொடர்ந்து படா படா தயாரிப்பாளர்கள் பலர் அவரது வீட்டை வரிசை கட்ட துவங்கியுள்ளனராம் புதுப்படத்துக்காக. ஆனால் ‘போனி கபூர்’ படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த போணி...என்பதில் தல உறுதி.

click me!