தல, நீ வில்லன சொல்றியா, இல்ல படம் பார்க்க வரப்போற ரசிகனுங்களை சொல்றியான்னு தெரியலையே! நம்பி வரலாமா?

By vinoth kumarFirst Published Jan 3, 2019, 4:57 PM IST
Highlights

கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்: பேட்ட படத்தில் ரஜினி. (தல, நீ வில்லன சொல்றியா, இல்ல படம் பார்க்க வரப்போற ரசிகனுங்களை சொல்றியான்னு தெரியலையே! நம்பி வரலாமா? ஏற்கனவே ‘இறைவி, மெர்குரி’ன்னு கார்த்திக்கு வெச்சு செஞ்சாரு தியேட்டருக்குள்ளே!)

* தியேட்டர் கிடைக்காத காரணத்தாலும், வசூலாகுமா எனும் பிரச்னையாலும் சில சிறிய பட்ஜெட் படங்களை நேரடியாக டி.வி.யில் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முடிவு: செய்தி. (அடப்பாவிங்களா, ஞாயித்துக்கிழம ஒரு நாள்தான் குடும்பம் முச்சூடும் ஒண்ணா ஒக்காந்து பழைய ஹிட்  படங்களை பதினஞ்சாவது தடவையா பார்த்து ரசிப்போம். இப்போ அதுக்கும் வெக்கிறீங்களாப்பு ஆப்பு?)

* ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டினால், மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்துக் கொள்வது பற்றி யோசிப்போம்! என்று சின்மயியிடம் நிர்வாகம் சொல்லிவிட்டதாம். கூடவே அவரை மன்னிப்பு கோர சொல்வதும் ஒரு நிபந்தனையாக வைக்கப்படால்! என்றும் தகவல்: செய்தி (சின்மயி மைண்ட் வாய்ஸ்...’போன 2016ம் வருஷம் டப்பிங் யூனியன் சார்பா எல்லாரும் ஹைதராபாத் போயிருந்தோம். ப்ரோக்ராம் முடிஞ்சதும் யூனியன் நிர்வாகிகள் சிலர் என்கிட்ட வந்து....!’. நிர்வாகிகள் மைண்ட் வாய்ஸ்...அய்யோ சாமி  மறுபடியும், மொதல்ல இருந்தா, நீங்க பணம் கட்டவே வேணாம் தாயீ!)

* கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்: பேட்ட படத்தில் ரஜினி. (தல, நீ வில்லன சொல்றியா, இல்ல படம் பார்க்க வரப்போற ரசிகனுங்களை சொல்றியான்னு தெரியலையே! நம்பி வரலாமா? ஏற்கனவே ‘இறைவி, மெர்குரி’ன்னு கார்த்திக்கு வெச்சு செஞ்சாரு தியேட்டருக்குள்ளே!)

* ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்க தக்கவையக உள்ளன. குறிப்பாக அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க விழா விரைவில் நடைபெறும் என சொல்லியிருப்பது வரவேற்கத்தகது: டாக்டர். ராமதாஸ். (கவர்னரை சுத்திச் சுத்தி வந்து கைதட்டுறதை பார்த்தா யாருக்கோ ஏதோ சேதி சொல்றா மாதிரி புரியுது. அதென்ன ஜாடை மாடையா பேசிக்கிட்டு, சட்டுன்னு கூட்டணி விருப்பத்தை போட்டு உடைச்சிட வேண்டிதானே!)

* குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டி.டி.வி. தினகரன் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது: செய்தி. (குக்கரேதான் வேணுமா? இந்த பால் சொம்பு, சோப்பு டப்பா, சாம்பார் சட்டியெல்லாம் எடுத்துக்க கூடாதா? ஹும்ம்ம்ம் முடியாதா.  அப்ப ஆர்.கே.நகர் பை எலெக்‌ஷன்ல ஜெயிச்சவங்களுக்கெல்லாம் குக்கர் சின்னம் கொடுக்குறதில்லை. )

click me!