கோடிகளை கொட்டிக் கொடுத்து “வலிமை”-யை தட்டித்தூக்கிய வெளிநாட்டு நிறுவனம்... லேட்டஸ்ட் அப்டேட்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 27, 2020, 2:07 PM IST
Highlights

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை மாற்றும் படி #thalachangeyourpro என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். 

​நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் -  போனிகபூர் - அஜித் கூட்டணி வலிமை திரைப்படம் மூலமாக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என கூறியிருந்தார்.

 

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை மாற்றும் படி #thalachangeyourpro என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். புத்தாண்டில் வலிமை படம் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார். தற்போது வலிமை பட பிசினஸ் குறித்து கசிந்துள்ள தகவல் தல ரசிகர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: விக்கி - நயன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... கவர்ச்சி உடையில் அசத்தலாக போஸ் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்....!

வலிமை படத்தில் வெளிநாட்டு உரிமையை கோடிகளைக் கொட்டிக் கொடுத்து, யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த நிறுவனம் கொடுத்துள்ள தொகை, முந்தைய அஜித் படங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையை விட  பல மடங்கு அதிகம் என்றும், கோடை விடுமுறையில் வலிமை படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!