அப்பா, அம்மாவையே மிஞ்சிய குட்டி தங்கங்கள்... வைரலாகும் தல அஜித்தின் குடும்ப புகைப்படம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 10, 2020, 11:11 AM IST

இந்த புகைப்படத்திலும் ஸ்கோர் செய்திருப்பது தல அஜித்தை விட அவரது மகன் ஆத்விக்கும், மகள் அனோஷ்காவும் தான் பார்க்க அப்படியே அப்பா, அம்மாவை உரித்து வைத்திருக்கும் குட்டி வைரங்களின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 


அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.

Tap to resize

Latest Videos

 மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தோனி மகள் ஷிவாவைப் போல, நம்ம தல அஜித்தின் செல்ல மகன் ஆத்விக்கிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.  

சமீபத்தில் குட்டி தல ஆத்விக் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. தல அஜித்துடன் ரசிகர்கள் எளிதாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அஜித் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுக்கும் பாக்கியம் பெரும்பாலான ரசிகர்களுக்கு கிடைத்தது இல்லை. 

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

ஆனால் அதையும் சாத்தியமாக்கியுள்ளார் தல ரசிகர் ஒருவர், அஜித், ஷாலினி மட்டுமில்லாது அவரது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என அனைவருடனும் நின்று குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார். வலிமை படத்திற்காக செம்ம எங் லுக்கில் இருக்கும் அஜித்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

இந்த புகைப்படத்திலும் ஸ்கோர் செய்திருப்பது தல அஜித்தை விட அவரது மகன் ஆத்விக்கும், மகள் அனோஷ்காவும் தான் பார்க்க அப்படியே அப்பா, அம்மாவை உரித்து வைத்திருக்கும் குட்டி வைரங்களின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

 

click me!