
'ஐஸ்வர்யா' படத்தின் மூலம், கன்னடத்தில் நாயாகியாக கால் பதித்த தீபிகா படுகோனே, தற்போது பாலிவுட் திரையுலகில் உள்ள உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல், பல பாலிவுட் முன்னணி நடிகர்கள் வரை, அனைவருக்கும் ஜோடியாக நடித்து விட்டார். மேலும் ராம் லீலா, மஸ்தானி, ராணி பத்மாவதி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா, திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'சப்பாக்' படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரின் நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து '83 ' படத்தில் நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, அவரின் மனைவி கதாப்பாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தீபிகா, கடற்கரையில்... உடல் தெரியும்படியான ஒரு வித மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த உடையில் அவரின் பின்னழகு மொத்தமும் தெரிகிறது. இந்த புகைப்படம் ஒரு பத்திரிகைக்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த புகைப்படம் இதோ....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.