
ஸ்ரீதேவி:
நடிகை ஸ்ரீதேவி இறந்தது முதல் அவரை பற்றிய பல்வேறு வெளிவராத தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அவரை பற்றி தெரிந்துக்கொள்வதிலும் ரசிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி வரைந்த படங்கள் ஏலத்திற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
ஓவியத்தில் கில்லாடி;
நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் கில்லாடி என தெரிந்த பலருக்கு இவர் சிறந்த ஓவியக் கலைஞர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவர் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருக்கு பிடித்த இயற்கை காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.
இவர் ஓவியம் வரைவதற்காகவே மிக பிரமாண்டமான அறையும் உள்ளதாம்.
ஏலத்திற்கு வரும் ஓவியம்:
இப்படி ஸ்ரீ தேவியால் வரையப்பட்ட ஓவியங்களை ஏலம் விட துபாய் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறதாம்.
ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்களின் விலை இதுவரை நிருணயிக்கப் படாத நிலையில், எப்படியும் அதிக தொகைக்கு விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.